கலியுகத்திற்கு முந்திய யுகங்களான கிருத, திரேதா யுகங்களில் முன்னோர்கள் நேரில் காட்சியளித்து திதி, தர்ப்பணங்களை ஏற்றனர். அப்போது பூமியில் தர்மம் தழைத்து இருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய போது தசரதர் நேரில் வந்து ஆசியளித்தார். துவாபர, கலியுகங்களில் முன்னோர்கள் நம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்தனர். ஆனால் இன்றும் சூட்சும வடிவில் நமக்கு ஆசியளிக்கின்றனர்.