3 ஆயிரம் வளையல் அலங்காரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2023 05:08
குன்னூர்: குன்னூர், சின்ன கரும்பாலம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நடந்த ஊஞ்சல் உற்சவ விழாவில், 3 ஆயிரம் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சின்ன கரும்பாலத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் காலை 5:00 மணிக்கு சோகத்தொரை அர்ச்சகர் மணி தலைமையில், யாக பூஜை நடந்தது. தொடர்ந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. குழந்தை வரம் வேண்டியும், தடைகள் நீக்கவும் ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பூசாரி சந்திரன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.