விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு சிலைக்கு வர்ணம் பூசும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2023 06:08
காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் செப்.18 ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதனால் காரைக்காலில் பல இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தி மூன்று நாட்களுக்கு பின்னர் கடலில் விடுவர்.இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கும் பணி காரைக்காலில் வேகமாக நடந்து வருகிறது. நிரவியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் கூடத்தில் சிவசுப்ரமணியன் தலைமையில் சிலைகள் தயாராகிறது பேப்பர், கிழங்குமாவு கூழ்கொண்டு விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு இறுதியாக வர்ணம் பூசப்படுகிறது. சிலைகள் 3.அடி முதல் 15 அடி வரை தயாரிக்கப்படுகிறது.ஆஞ்சநேயர்,சிங்க வாகனம்,மூஞ்சுறு.ரிஷப வாகனம், சிவலிங்கத்தின் மீது விநாயகர் என பல வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு இறுதியாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விநாயகர் சிலைகள் நாகை, திருவாரூர். வேதாரண்யம், திருப்பூண்டி,சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களிக்கு விநாயகர் சதுர்த்திக்காக வாங்கி செல்கின்றனர்.இதனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தீவிரமாக தாயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.