பதிவு செய்த நாள்
16
ஆக
2023
06:08
பல்லடம்: பல்லடம் அருகே, ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடத்தில், மூலமந்திர லக்ஷ ஹோம பெருவிழா நடந்தது.
பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரத்தில், அதர்வண பத்ரகாளி பீடம் உள்ளது. இங்க, 16 அடி உயரத்தில் பிரத்தியங்கிரா தேவி மூலவராக அருள்பாலிக்கிறார். கோவிலில், மூலமந்திர லக்ஷ ஹோமப் பெருவிழா ஆக., 11 அன்று மகா கணபதி பூஜை, கோ பூஜை, கலச பூஜை, நவகிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமம் மற்றும் பிரத்தியங்கிரா லக்ஷ ஹோமம் ஆகியவற்றுடன் வினோத் துவங்கியது. தொடர்ந்து, ருத்ர ஹோமம், மகா சுதர்சன ஹோமம், மங்கள மகா சண்டி ஹோமம் ஆகியவையும் நடந்தன.
நேற்று, மகா கணபதி பூஜை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவற்றைத் தொடர்ந்து, விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பாலபிஷேகம் எடுத்து வந்தனர். இதில், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி அம்மன் வேடமடைந்த பக்தர்கள் பலர் நடனம் ஆடியபடி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, பில்லி, சூனியம், ஏவல், பயம் உள்ளிட்டவற்றை போக்கும் நிகும்பலா யாகம் எனப்படும் வரமிளகாய் யாகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரத்யங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.