செந்துறையில் மழைவேண்டி ஸ்ரீகுறத்தி அம்மன் கோவிலில குத்துவிளக்கு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2023 06:08
செந்துறை: நத்தம் செந்துறை குரும்பபட்டி ஸ்ரீ குறத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிவிழா நடந்தது. விழாவையொட்டி கோவிலின் முன்பு பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். முன்னதாக
மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும்,உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து குறத்தி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குறத்தி அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் அனைத்தும் விதவிதமான வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.