சாயல்குடி: சாயல்குடி அருகே காணிக்கூர் பாதாள காளியம்மன் கோயில் விழாவில் துல்லு மாவு பிடிக்கப்பட்டது. வயலில் விதைத்துள்ள மானாவரி பயிர்களுக்கு பருவ மழை பெய்து நல்ல மகசூல் கிடைக்க வேண்டியும் பூஜைகள் நடந்தது.
விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடந்த பந்தயத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து காளைகளுடன் வீரர்கள் பங்கேற்றனர். கமுதி சாலையில் போட்டிகள் நடந்தது. சாலையின் இருபுறங்களிலும் பார்வையாளர்கள் போட்டியை கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்க பணம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.