பதிவு செய்த நாள்
17
ஆக
2023
12:08
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ்மாத முதல் ஞாயிறு, ஆண்டு பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதன்படி, ஆடி அமாவாசையான நேற்று, ஆஞ்சநேயருக்கு காலை, 9:00 மணிக்கு வடைமாலை, வெற்றிலை மாலையும், 10:00 மணிக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.