பூரி ஜெகநாதர் கோயிலில் அமிர்த கலசம் ஏந்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2023 01:08
ஒடிசா; ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஆகஸ்ட் 17) அமிர்த கலசம் ஏந்தி வழிபாடு செய்தார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான பூரி ஜெகந்தார் கோவிலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை வந்தார். அவர் கோவிலில் அமிர்த கலசம் ஏந்தி சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். அவருடன், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா மற்றும் உள்ளூர் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 2047ம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாகி விடும் என ஒடிசாவில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் குறிப்பிட்டார். ஆங்கிலேயர்கள் நமக்கு புகுத்திய அடிமை மனப்பான்மையில் இருந்து நாம் விடுபட வேண்டும். என்றார். தொடர்ந்து, மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் மேரி மாதா மேரி தேஷ் கலை சிற்பத்தையும் கண்டு மகிழ்ந்தார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் சஹீத் ஜெய் ராஜ்குருவின் பிறந்த இடத்திற்குச் சென்று அங்கு அவர் மரியாதை செலுத்தினார்.