நரசிம்மநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2023 03:08
பெ.நா.பாளையம்: ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆடி மாதம் ஐந்தாவது மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் அங்காளம்மன் மற்றும் கொங்காளம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன், பண நோட்டுகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.