திண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2023 03:08
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தில் திண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. பின்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். மேலச்சிறுபோது கிராமத்தில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், தவளும் பிள்ளைகள் கிராமத்தில் முக்கிய விதிகளில் ஊர்வலமாக தூக்கி கொண்டுவரப்பட்டு கிராமத்தில் வைக்கப்பட்டது. பின்பு கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. குதிரைகளுக்கு திண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராமத்தின் சார்பில் நாடகம் நடந்தது.ஏற்பாடுகளை மேலச்சிறுபோது கிராமமக்கள் செய்தனர்.