வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 30ல் நடந்தது. நாள்தோறும் பக்தர்களால் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று 48 நாள் மண்டல பூஜை துவங்கியது. கும்பாபிஷேக திருப்பணி குழுவினர் ஏற்பாடுகளுடன் யாகம் நடத்தப்பட்டது. மாரியம்மன் கோயில் உபயதாரர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி தலைவர் சிதம்பரம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி துவக்கி வைத்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். மண்டல பூஜையை ஒட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை தீப ஆராதனைகள் நடந்தன.