புவனேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா; பூத்தட்டு எடுத்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2023 05:08
தேவகோட்டை: புவனேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சோரிதல் விழா கடந்த 11 ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு வெவ்வேறு வகையான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்கேற்றி விளக்கு பூஜை நடத்தினர். பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஏராளமான குடும்பத்தினர் பொங்கல் வைத்தனர். ஆன்மிக எழுத்தாளர் இலக்கியமேகம் சீனிவாசன் பக்தி சொற்பொழிவாற்றினார். சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளில் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர்.