ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாளின் திருமுகம் மற்றும் திருவடி தரிசனம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2023 05:08
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஷ்ட்டாபிஷேகம் அன்று தைலக்காப்பு சாற்றப்பட்டு பெரிய பெருமாளின் திருமுகம் மட்டும் சேவை ஆகிவந்தது. தற்போது தைலக்காப்பு உலர்ந்துவிட்டபடியால் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பெரிய பெருமாளின் திருமுகம் மற்றும் திருவடியை தரிசனம் கிடைத்ததால் பக்தர்கள் பரவசத்துடன் கோவிந்தா கோஷம் முழங்கி வழிபட்டு சென்றனர்.