காரைக்குடி: காரைக்குடியில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காரைக்குடியில் நடந்த விழாவில் அருட்பெருஞ்ஜோதி ஞான தீபம் பொருத்துதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தொடர்ந்து கண்ணதாசன் மணி மண்டபத்தில் இருந்து வள்ளலாரின் உருவபடத்துடன் சுத்த சன்மார்க்க நெறி தொண்டர்கள் வள்ளலார் வாசகம் அடங்கிய பதாகைகளையும், கொடி ஏந்தியும் வள்ளலார் அருள்நெறி பரப்புரை பேரணியை நடத்தினர். தொடர்ந்து எல்.சி.டி. பழனியப்ப செட்டியார் மஹாலில் திருவருட்பா இசையமுது நிகழ்ச்சியும், சமரச சுத்த சன்மார்க்க கருத்தரங்கம் நடந்தது நிகழ்ச்சியும் நடந்தது.