காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே ரோடு, மாமல்லன் நகர் ஆர்ச் எதிரில் அமைந்துள்ளது, தேவி கருமாரி அம்மன் கோவில். இங்கு, ஆடித் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி பந்தகால் நடப்பட்டது. நேற்று முன்தினம் காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்று காலை திருக்காலிமேடு வேப்பங்குளக்கரையில் இருந்து பூங்கரகம் வீதியுலா நடந்தது. இதையடுத்து, மதியம் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் அம்மன் வீதியுலாவும், பின், கும்பம் இடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை, கருமாரி அம்மன் நான்கு ராஜவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.