விழுப்புரம் : விழுப்புரம், திரு.வி.க., வீதி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்றுமுன்தினம் காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று 21ம் தேதி காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குமார், செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.