பதிவு செய்த நாள்
23
ஆக
2023
10:08
திருப்பரங்குன்றம் : சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்று (ஆக.23) மாலை 6:00 மணியளவில் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்க உள்ளது. இதையொட்டி மதுரை திருநகர் மங்கள விநாயகர் பக்த ஜன சபை சார்பில் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை வெற்றி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. நிர்வாகிகள் மணிக்கலை அரசன், ஸ்ரீ பாரத், ஸ்ரீசாஸ்தா, முத்து, சீனிவாசன், அங்குசாமி, ராஜசேகர், பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
உலகம் முழுதும் பிரார்த்தனை: நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் - 3 விண்கலத்தின், லேண்டர் சாதனத்தை, இன்று மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. சந்திரயான் 3 வெற்றிக்காக உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பிரார்த்தனை செய்தனர். ஆக்ரா மற்றும் வாரணாசியில் மக்கள் பாரம்பரிய ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளை செய்து வருகின்றனர். இதேபோல், லக்னோவில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதேபோல் அனைத்து சமயத்தினரும் ஹோமம், மற்றும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.