பதிவு செய்த நாள்
24
ஆக
2023
11:08
மதுரை; நிலவில் சந்திரயான் வெற்றிகாரமாக இறங்கியதை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கியதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திங்களூர் சந்திரனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரார்த்தனையின் பயனாக சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கியது. ஆன்மீகம் மற்றும் அறிவியல் இரண்டிலும் அசைக்க முடியாத இடத்தில் இந்தியா இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். சந்திரயான் நிலவில் பத்திரமாக தரையிறங்க வேண்டி உலகம் முழுவதும் சர்வ மத சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது குறிபிடத்தக்கது.
நிலவில் சந்திரயான்3 தரை இறங்கியதை கொண்டாடும் விதமாக நேற்று காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யோஸ்வர் கோவிலில் தனி சன்னதியில் சனிஸ்வரபகவான் அருள்பலித்து வருகிறார். இந்நிலையில் உலக அளவில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வல்லரசு நாடாக உருவாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சந்திரயான்) நிலவில் சிறப்புடன் தரையிறங்க இந்திய விஞ்ஞானிகள் இரவும் பகலும் தன்னலம் கருதி இந்திய நாட்டிற்கு பெருமைக்காக சேர்த்துள்ளனர். நிலவில் சந்திரயான் 3 தரை இறங்கியதை கொண்டாடும் விதமாக திருநள்ளார் சவீஸ்வர பகவான் கோவிலில், புதுச்சேரி மாநில பா.ஜ.க.,துணை தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜக கட்சியினர் சிறப்பு பூஜை செய்தனர்.இதில் பா.ஜ.க. பிரமுகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம்: சந்திரயான்-3 நிலவில் தரை இறங்கியதை ராமேஸ்வரத்தில் பா.ஜ., ஹிந்து அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளிதரன் தலைமையில் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.