இடியும் தருவாயில் ராமேஸ்வரம் கோயில் பழமையான விடுதி : ஆபத்து ஏற்படும் அபாயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2023 04:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் பழமையான தங்கும் விடுதி இடியும் தருவாயில் உள்ளதால், ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான திருப்பதி காட்டேஜ் எனும் தங்கும் விடுதி, கோயில் தெற்கு ரத வீதியில் உள்ளது. இக்கட்டடம் 40 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் கட்டிடம் பலவீனமாகி சிமெண்ட் சிலாப்புகள், மேற்கூரைகள் உள்ள கான்கிரீட் கலவை இடிந்து விழுந்து, கம்பிகள் வெளியில் தெரிந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு பக்தர்கள் தங்க கோயில் நிர்வாகம் அனுமதிக்காமல், விடுதியை மூடியது. இந்நிலையில் கோயிலில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள், இந்த பழமையான கட்டிடத்தில் யூனிபார்மை வைத்து விட்டு, வேலை நேரத்தில் அணிந்தும் செல்கின்றனர். இக்கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என அபாய நிலையில் உள்ளது. ஆனால் ஊழியர்கள் விபரீதத்தை உணராமல் இங்கு வந்து செல்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பழமையான இக்கட்டடத்தை இடித்து அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.