Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரம் தந்து அருள்வாய் தாயே... சூலூர் ... கன்னியாகுமரி கோவில்களில் எம்.பி.க்கள் குழு தரிசனம் கன்னியாகுமரி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நொய்யல் பெருவிழா துவக்க விழா; தென்னாடுடைய சிவனே போற்றி தேவார பாடலுடன் உரையை துவங்கிய தமிழக கவர்னர்
எழுத்தின் அளவு:
நொய்யல் பெருவிழா துவக்க விழா; தென்னாடுடைய சிவனே போற்றி தேவார பாடலுடன் உரையை துவங்கிய தமிழக கவர்னர்

பதிவு செய்த நாள்

25 ஆக
2023
03:08

பேரூர்: கோவையில் நடந்த நொய்யல் பெருவிழா துவக்க விழாவில், தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என தமிழக கவர்னர் ரவி, தமிழில் உரையை துவங்கினார்.

கோவையில், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், நொய்யல் ஆறு அறக்கட்டளை மற்றும் கொங்கு மக்கள் இணைந்து, நொய்யல் பெருவிழாவின் துவக்க நிகழ்ச்சி, பேரூர் ஆதீனத்தில் உள்ள அரங்கில் நடந்தது. 7 நாட்கள் நடக்கும் இவ்விழாவின் துவக்க விழாவில், தமிழக கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவை, தமிழக கவர்னர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இதில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், திருவாவடுதுறை ஆதினத்தின் திருச்சிற்றம்பலம் தம்பிரான், டெல்லி ஆச்சார்யா சபா அனந்தநாத் மகராஜ், நொய்யல் பெருவிழா ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்தானந்தா, ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்கணேஷ், சிறுதுளி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் மற்றும் 200க்கும் மேற்பட்ட சன்யாசிகள் கலந்து கொண்டனர். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என தமிழில் உரையை துவங்கி தமிழக கவர்னர் ரவி பேசுகையில்," சந்நியாசிகள் பங்கேற்றுள்ள நிகழ்வில் பங்கேற்பது ஆசிவதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நொய்யல் ஆறு மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியது. நம் நாட்டில் நீர்நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும், ஆனால், பல ஆண்டுகள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்த அந்நியர்களின் படையெடுப்பு, ஆக்கிரமிப்பால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டது.

பாரதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆறு என்று முதலில் சொல்லப்படும், கலாச்சாரம் கொண்ட நாம் யார் என்பதை ஆறுகள் மூலமே சொல்லப்படுவதாக சுட்டிக்காட்டியவர், உலக உருவாக்கததில் ஒரு பொருள் மனிதன் என்பதையும், கடவுளின் மற்ற படைப்பையும் நாம் மதிக்க வேண்டும், படைக்கப்பட்ட குடும்பத்தில் நாம் ஒரு பொருள் என்பதை உணர வேண்டும். குருமார்கள், சந்நியாசிகள் ஆகியோர் தான் படையெடுப்பிலும் சனாதன கொள்கையின் தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருந்தது. தற்போது மேற்கத்திய பண்பாடு, நம்மை அந்த தொடர்பிலிருந்து துண்டிக்கிறது. அன்னை பூமியை பாழாக்கி வரும் இந்த காலத்தில் இதுபோன்று நிகழ்வு அவசியம். அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம் என்பதையும், தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்பதனால், நீரை அன்னையாக பார்த்து பிரார்த்திக்க வேண்டும். அனைவரும் குடும்பம் என்ற கருத்துருவை, உலக நாடுகளுக்கு ஜி20 மாநாடு மூலம் பிரதமர் கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வகைகளில் பூமியின் வாழும் அனைத்து உயிர்களிடத்திலும் தொடர்பு வெளிப்படுவதை ரிஷிகள் சொன்னதுடன், அனைவரும் ஒரு குடும்பமாக வாழும் நிலையில், ஒருவருக்கு பிரச்னை என்றால் அது மற்றவற்றை பாதிக்கும் என சொன்ன ரிஷிகள் நம் பாரதத்தில் உள்ளதால் அந்த பொறுப்பு நமக்கு அதிகம். அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகும், நம்மை விட்டு சென்றவுடன், நாட்டில் தொழிற்சாலைகள், பொருளாதாரம் வளர்ந்தாலும், பாரதத்துடனான உயிர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சாதி, மதம்,ஆரியன், திராவிடன் என பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள். நம் நாட்டை வலுப்படுத்துவதை நம் ஒவ்வொருவரின் கடமை என்றார். ராஜா, ராணியாக செயல்படுவது நம் பாரதமில்லை. சமூகம் அடிப்படையில் ஒரு குடும்பமாக வாழ்பவர்கள் நாம் என்பதனால், அந்த சமூகத்தை மீட்க வேண்டிய நிலையில் உள்ளது. நம் நாட்டை இந்நாட்டு மக்கள் தான் உருவாக்கினார்கள். அரசு உருவாக்கவில்லை. நிலவுக்கு போக வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், 100 ஆண்டுகளில் இராணுவ அதிகாரத்தால் ஆளப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, அணு ஆயுதங்கள் செய்ய கூடாது என்று சொன்ன நாடுகளின் மத்தியில், இந்தியா வளர்ந்து, சில நாடுகள் நிலவை சொந்தம் கொண்டாட நினைக்கிறது. ஆனால், தற்போது இந்தியாவால் அதை சாதிக்க முடிந்தது. அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் நாம் வெற்றிபெற்று உள்ளது, நம் வலிமையை காண்பித்து உள்ளது. கொரோனா தடுப்பூசி மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று சில நாடுகள் எண்ணியது போல் நாம் எண்ணாமல் பகிர்ந்து கொண்டோம். உலகத்தின் நன்மைக்காக நாம் புது வலிமையுடன், உறுதியுடன், தெளிவுடனும் பயணிக்கிறோம். 2047 இந்தியா முழுமையாக வலிமையான, வளர்ந்த நாடாக இருக்கும். இந்த பாரதம் ரிஷி, குருமார்களால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதிகாரம் செய்யும் நோக்கம் இல்லாமல், அறிவை வழங்கும் என்பதால் ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது. அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவின் சமூகத்தை எழுப்புவதுடன், நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும். அதற்கு நீர்நிலைகள் பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்நிகழ்வு வெற்றியடைய வாழ்த்துகள்,வளமாக மட்டுமின்றி அன்னையாக ஆறுகளை பார்க்கும் மன நிலையை உருவாக்க வேண்டும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar