பதிவு செய்த நாள்
25
ஆக
2023
03:08
சூலூர்: வரலட்சுமி பூஜையை ஒட்டி, அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் வட்டார கோவில்களில், இன்று வரலட்சுமி பூஜையை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. சின்னியம்பாளையம் மங்களாம்பிகை அம்மன் கோவில், கணியூர் கொங்காலம்மன், அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன், சூலூர் மேற்கு அங்காளம்மன், அத்தனூர் அம்மன், ராமாட்சியம்பாளையம் மாகாளியம்மன், செங்கத்துறை மாகாளியம்மன், குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் அம்மனுக்கு, திரவிய பொருட்கள், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.