பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் வரலட்சுமி நோன்பினை முன்னிட்டு மகாலட்சுமி, சப்தகன்னிமார்கள் அம்மனுக்கு தாமரை பூ, மல்லிகை பூ உட்பட மலர்களாலும், பல்வேறு திரவிய பொருட்களாலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு, வளையல்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார். கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன், பள்ளத்து காளியம்மன் உட்பட அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.