தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்தநாள் விழா; திருப்பதியில் புஷ்பாஞ்சலி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2023 11:08
திருப்பதி; மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாவின் 206-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், நேற்று திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் புஷ்பாஞ்சலி செய்தனர்.
ஆந்திரமாநிலம் தரிகொண்டா என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, சதா சர்வகாலமும் திருவேங்கடவனை நினைத்து உருகி தன்னை அர்ப்பணித்து, திருவேங்கடமுடையானையே தன் கணவனாக பாவித்து, திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவள் மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா. வெங்கமாம்பாவின் 206-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் வெங்கமாம்பாவிற்கு சிறப்பு வழிபாடு மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவில் ஸ்ரீ விஸ்வமூர்த்தி, வெங்கமாம்பா திட்ட அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.