பதிவு செய்த நாள்
30
ஆக
2023
05:08
சோமனூர்: சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூணூல் மாற்றும் விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
சோமனூர் சுற்றுவட்டார கிராமங்களில், ஆயிரக்கணக்கான தேவாங்க செட்டியார் சமுதாய மக்கள் வசிக்கின்றனர். கைத்தறி நெசவு செய்யும் இச்சமுதாயத்தினர், பூணூல் மாற்றும் விழாவை சிரத்தையுடன் கொண்டாடுவர். சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், காயத்திரி ஹோமம் நடத்தி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. பின்னர் ஏராளமானோர் பூணூல் மாற்றி கொண்டனர். இதேபோல், கருவேலங்காடு, சுப்பராயன் புதூர், செகுடந்தாளி, செம்மாண்டாம் பாளையம் , கோதபாளையம், வினோபா நகர், நெசவாளர் காலனி, செல்லப்பம்பாளையம், சந்திராபுரம், சென்னப்ப செட்டி புதூர், வாகராயம் பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமானோர் கோவில்களில் பூணூல் மாற்றி கொண்டனர். இன்று குமாரபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பூணூல் அணிந்த பின் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.