ஆவணி பவுர்ணமி; மௌனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2023 05:08
கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. திரவிய அபிஷேகம், திருமஞ்சனம் சாற்றுதலுடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு, மகா தீபாராதனை நடந்தது.
* கசவனம்பட்டி மௌனகுரு சுவாமி கோயில், செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், பவுர்ணமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.