Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதித்யா எல்1 வெற்றிக்கு வாரணாசியில் ... அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி முருகன் கோவிலில் அக்., 1 முதல் மொபைல், கேமராவுக்கு தடை
எழுத்தின் அளவு:
பழனி முருகன் கோவிலில் அக்., 1 முதல் மொபைல், கேமராவுக்கு தடை

பதிவு செய்த நாள்

02 செப்
2023
11:09

சென்னை, பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குள் மொபைல் போன்கள், கேமரா பொருத்தப்பட்ட கருவிகள் கொண்டு வர விதிக்கப்பட்ட தடை, அக்., 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.

கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலைய துறை தெரிவித்துள்ளது. பழனி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து, கோவில் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு கவனத்துக்கு வந்தது. இதுகுறித்து விசாரித்த சிறப்பு அமர்வு, பழனி கோவிலில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன என்பது தொடர்பான ஆரம்ப கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நேற்று சிறப்பு அமர்வு முன், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனி கோவில் சார்பில் வழக்கறிஞர் ஆர்.பரணிதரன் ஆஜராகி, இணை ஆணையரின் ஆரம்ப கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதன் விபரம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை, ௨௦௨௨ டிச., 2ல் பிறப்பித்த உத்தரவின்படி, பழனி கோவிலுக்குள் மொபைல்போன்கள், கேமரா பொருத்தப்பட்ட கருவிகள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை, அக்.,1 முதல் அமலுக்கு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்துார் சுப்ரமணிய சாமி கோவிலில், சுய உதவி குழுக்கள் வாயிலாக, மொபைல் போன்கள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதுபோல பழனியில், ’விஞ்ச், ரோப்’ கார் மையங்கள், மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் அருகே என, மூன்று இடங்களில் மொபைல் போன் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும். மலை கோவில் அருகே அமைந்துள்ள தண்ணீர் பந்தல் மண்டபம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்து, அது மீட்டு எடுக்கப்பட்டால், அதில் ஒரு பகுதி, மொபைல் போன் சேகரிப்பு மையமாக பயன்படுத்தப்படும். கோவிலுக்குள் மொபைல் போன்கள் எடுத்துச் செல்லக்கூடாது என, ரயில், பஸ் நிலையங்கள், பக்தர்கள் தங்கும் இடங்களில் விளம்பரப்படுத்தப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பரிசோதிக்கப்படுவர். இந்த சோதனையையும் மீறி, பக்தர்கள் எவரேனும் கேமரா போன்ற பொருட்களை கொண்டு வந்து, கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால், அவர்களை கண்டறிந்து குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்று, இந்த நடைமுறைகளை அனைத்து கோவில்களிலும் பின்பற்றும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் அனைவரும் பார்க்கும் வகையில், கூடுதலாக மாற்று இடத்தில் தீபம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றக்கோரி ... மேலும்
 
temple news
கோவை: கார்த்திகை மாதம் கடைசிசனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீஅய்யப்ப சுவாமிக்கு நேற்று, பவானி கூடுதுறையில் ஆராட்டு உற்சவமும்; மாலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar