பதிவு செய்த நாள்
02
செப்
2023
11:09
பாலசமுத்திரம்: பழநி, பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்சவ திருவிழாவில் திருக்கல்யாணம் நடந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆக.26., சிறப்பு பூஜைகளுடன் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவில் நேற்று (செப்.1ல்) மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் இன்று (செப் 2ல்) தேய்க்கினியான், இரவில் பாரிவேட்டை, செப்.3ல் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. செப் 4ல் கொடியிறக்குதல், செப். 5.,ல் விடையாற்றி உற்ஸவம் நடைபெறும். தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.