மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக மகா பாலாலயம் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2023 10:09
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக பாலாலய பூஜைகள் இன்று நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் வீரவசந்தராயர் மண்டபத்தில், 2018ல் ஏற்பட்ட பெரிய தீ விபத்தைத் தொடர்ந்து, சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்து 2026ம் ஆண்டுக்குள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிகிறது. இதன் முதற்கட்டமாக பாலாலய பூஜைகள் இன்று துவங்கியது. விழாவில் ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று கோபுரங்களுக்கும், ஒன்பது நிலை கோபுரங்களுக்கும், அம்மன் ஏழு நிலை கோபுரங்களுக்கும் பாலாலய பூஜைகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாலாலய பூஜைக்கு பின்னர் கோபுர திருப்பணிகள் தொடங்கும்.