பதிவு செய்த நாள்
11
அக்
2012
10:10
பழநி: பழநி அருகே கோவிலில், வானம் தோண்டும் போது, 17ம் நூற்றாண்டை சேர்ந்த அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பழநி கோவிலின் உப கோவிலான, சோழீஸ்வரர் கோவில், புது ஆயக்குடியில் உள்ளது. இந்த கோவிலில், மடப்பள்ளி கட்ட வானம் தோண்டினர். அப்போது, 17ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழிஸ்வரி அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிலை குறித்து, தொல்லியல் ஆய்வாளர், நாராயணமூர்த்தி கூறியதாவது: பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த, இந்த சிலையின் உயரம், 108 செ.மீ., சுற்றளவு, 101 செ.மீ., கிரீடம், நெற்றிச் சுட்டி, தாலி, மார்புக்கச்சை, இடையில் பிரிந்த முப்புரி, தோளணி, கை வங்கி, வளை, கால் தண்டை, கொலுசு முதலியவற்றுடன் சிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.