படுக்கையில் கிடந்த முதியவர் முகம் பிரகாசித்தது. அவரைப் பார்த்து உறவினர் ஒருவர் கேட்டார், ‘‘உங்களுக்கு எத்தனை வயது ஐயா?” சிரித்த முகத்துடன், ‘‘எண்பது என்னும் இனிய வயதில் இருக்கிறேன்’’ என்றார். ‘‘எண்பது உங்களுக்கு இனிமையாக இருக்கிறதா... நோய்யுற்று நடக்க முடியாமல் தவிக்கிறீர்கள்... இது எப்படி இனிமையாகும்?’’ என்றார் உறவினர். சிரித்துக் கொண்டே, ‘‘முதுமையில் என் கால்கள் தள்ளாடுவதும், கண்களும் மங்கிவிட்டன என்பதும் உண்மை. உடல் பலமற்று விட்டது என்றாலும், வாழ்வின் இனிய காலம் நெருங்குகிறேன். ஆண்டவரை காணும் நாள் நெருங்குவதை உணர்கிறேன். அதனால் அந்நாளும் இனிமை தான்’’ என்றார். எத்தனை வயதானாலும் எண்ணத்தில் துாய்மை இருந்தால் எல்லாம் நன்றாக அமையும்.