மலை உச்சியில் இருந்து கீழே ஒருவர் குதித்தால் உயிர் பிரியும் வரை வேதனை. ஆனால் பாவம் எனும் பள்ளத்தில் ஒருவர் விழுந்தால் முழு வாழ்க்கையும் வேதனை தான். தவறு செய்தவர்களில் சிலர் மனசாட்சியின் உறுத்துதலால் காலமெல்லாம் வேதனையை அனுபவிப்பர். இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி அவர் ஒழுக்கமாக வாழ்வது தான். ஒழுக்கமான வாழ்வில் நம்மை தாங்கிப் பிடிக்கும் கை தேவனுடையது. யாருக்கெல்லாம் மனம் சறுக்கும் போது தேவனை நினைக்கின்றார்களோ அவர்களுக்கு ஆண்டவர் கிருபை உண்டு. இதைத்தான் பைபிள் ‘வழுவாதபடி காத்தருளும்...’ என்கிறது. ஒழுக்கத்தை உயிரை விட மேலாக மதியுங்கள்.