பிரச்னை ஒன்றுக்கு தீர்வு கிடைக்காமல் குழம்பினார் லிங்கன். அவரது நண்பரிடம் பிரச்னையை விளக்கினார். அவருக்கும் விடை தெரியவில்லை. இருந்தாலும் ஆறுதல்படுத்தும் நோக்கத்துடன், ‘‘நண்பரே கலங்காதீர். ஆண்டவர் உம்முடைய பக்கம் இருக்கிறார்’’ என்றார். அதற்கு லிங்கனோ ‘‘ஆண்டவர் என் பக்கம் இருக்க வேண்டுமென்பது என்பதல்ல என் நோக்கம். நான் அவர் பக்கம் இருக்க வேண்டும். அதுவே என் விருப்பம்’’ என்றார். குழப்பமான மனநிலையிலும் லிங்கனிடம் இருந்த தெளிவைப் பார்த்தீர்களா! எப்போதும் அவர் நம் பக்கம் வர வேண்டும் என்பதை விட நாம் அவர் பக்கம் இருப்பதே சிறப்பு.