கம்பம் வேலப்பர் கோயில் திருப்பணி பாலாலயத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2023 12:09
கம்பம்; கம்பம் வேலப்பர் கோயில் திருப்பணிகள் நேற்று பாலாலய பூஜையுடன் துவங்கியது. கம்பம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வேலப்பர் கோயில். திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளாகி விட்டது. எனவே,திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. புராதானமானதும், பிரசித்திபெற்றதுமான வேலப்பர் கோயில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு விமானம் இறக்கி வைக்கப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜைகள் நடத்தி அத்திமர பலகையில் விமானம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பாலாலய பூஜைகள் நடந்தது. எம். எல்.ஏ. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், தி.மு.க. செயலாளர் வீரபாண்டியன், ஹிந்து சமய அறநிலைய துறை அலுவலர் தியாகராசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.