சாயல்குடி: சாயல்குடி சுயம்புலிங்க நகரில் உள்ள சாஸ்தா சுயம்புலிங்க சுவாமி கோயிலில் பொங்கல் விழா நடந்தது. கடந்த ஆக., 29 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. செப்.1 அன்று மாலையில் விளக்கு பூஜை நடந்தது. இன்று காலை 9:00 மணி அளவில் சாயல்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய விதியின் வழியாக ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து சுயம்புலிங்க சுவாமி மற்றும் பிரம்மசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை காலை 7:00 மணியளவில் ஏராளமானோர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சாயல்குடி பூவன் நாடார் வகையறா மற்றும் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.