அம்மனுக்கு கரகம் எடுத்து நேத்திக்கடன் நிறைவேற்றிய பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2023 06:09
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர் தெரு முத்துமாரியம்மன் கோயில் விழா ஆக.28 ல் காப்பு கட்டுகளுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன.விழாவின் தொடர்ச்சியாக செப்.1ல் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக விரதம் இருந்த பக்தர்கள் கரகம், தீச்சட்டி எடுத்து முக்கிய வீதியில் வழியாக ஊர்வலமாக சென்று நேத்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து வீடுகளில் வளர்க்கப்பட்டிருந்த முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை வள்ளுவர் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.