Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்துார் கோவில் தங்கம் 168.68 ... அம்மனுக்கு கரகம் எடுத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழி அருகே பழமையான விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2023
06:09

திருச்சுழி: திருச்சுழி அருகே பழமையான விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திருச்சுழி அருகே எழுவணி கிராமத்தில் பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதை, பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் செல்லபாண்டியன், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோ நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது : முற்கால பாண்டிய மன்னர்கள் வீரத்திலும், பக்தியிலும் கலைகளும் சிறந்து விளங்கினர். இதற்கு உதாரணமாக தற்போது அதிக அளவில் கிடைத்துக் கொண்டிருக்கும் முற்கால பாண்டியரின் சிற்பங்களும் கல்வெட்டுகளுமே சாட்சியாகும். ஒவ்வொரு ஊரிலும் முற்கால பாண்டியர்கள் சிவனுக்கும், பெருமாளுக்கும் தனித்தனியே கோயில் அமைத்து சைவத்தையும், வைணவத்தையும் இரு கண்களாக பாவித்து அந்த கோவில்களுக்கும் அதிக அளவில் நிவந்தங்கள் கொடுத்தும், இறையிலி நிலங்கள் கொடுத்தும் பக்தியை வளர்த்தனர். மக்களும் அதே வழியை பின்பற்றி கோவில்களை பாதுகாத்து வந்தனர். கால ஓட்டத்தில் அதிகமான கோவில்கள் சிதைந்து காணாமல் போய்விட்டன. கோவில்கள் அழிந்தாலும் அவற்றில் உள்ள சிற்பங்கள் இப்பொழுது அதிக அளவில் வெளிப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக முற்கால பாண்டியர்களின் கலை பாணியை அறிய முடிகிறது. இங்குள்ள விநாயகர் சிற்பம் மூன்றரை அடி உயரத்திலும், இரண்டடி அகலத்திலும் உள்ளது. துதிக்கை இடது புறமாக வளைந்த நிலையில் மோதகத்தை பற்றியவாறு காட்சி தருகிறது. மொத்தம் நான்கு கரங்கள் உள்ளன. வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் பாசமும் உள்ளது. வலது கீழ்கரத்தில் உடைந்த தந்தம் உள்ளது. இவர் ராஜ நீலாசனத்தில் அமர்ந்து கம்பீரமாக காட்சி தருகிறார். இன்றைய காலகட்டத்தில் முர்கால பாண்டியர்களின் கோயில்கள் கிடைக்காவிட்டாலும் அவர்கள் காலத்தைச் சிற்பங்களும் கல்வெட்டுகளும் அதிகம் கிடைத்து வருகின்றன, என்று கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.காரமடையில் ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் - சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பூர், அவிநாசி அடுத்த சேவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணியன் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெய்வானை யானை தாக்கியதில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar