பதிவு செய்த நாள்
07
செப்
2023
11:09
பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், நேற்று அதிகாலை 3.00 மணிக்கு விழா துவங்கியது. 7.00 மணிக்கு செண்டை மேளம் வாத்தியங்கள் முழங்க யானைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. காலை 9.00 மணி அளவில் கிருஷ்ணர் வேடம் அணிந்த ஏராளமான சிறுவர் சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், மம்மியூர் கோவில் சன்னதியில் இருந்து புறப்பட்டு, மதியம் கிருஷ்ணர் கோவிலை அடைந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் மேல் சாந்தி தோட்டம் சிவகரன் நம்பூதிரியின் தலைமையில் நடந்தன.
*பாலக்காடு அடுத்துள்ள, குன்னத்தூர்மேடு ஸ்ரீகிருஷ்ணர், சின்மயா தபோவன குருவாயூரப்பன் கோவில்களில் விழா கொண்டாடப்பட்டது. குன்னத்தூர்மேடு ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் கிருஷ்ணரின் தங்க சிலை, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது