மதுரை மீனாட்சி அம்மன் கோயில் லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதங்களுக்குள் மாற்ற ஐகோர்ட் உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2023 11:09
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தயாரிக்கும் இடத்தை நான்கு மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில், உலக புகழ் பெற்ற, சுந்தரேசுவரர் - மீனாட்சி கோவில் உள்ளது. தினமும், ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும் பணி திருஞானசம்பந்தர் மண்டபத்தில் நடந்து வந்தது. இதனை மாற்றக் கோரி மதுரை ஆதினத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதங்களுக்குள் மாற்ற உத்திரவிட்டுள்ளது. மேலும் திருஞானசம்பந்தர் மண்டபத்தில் தேவாரம், திருவாசகம் குறித்த பாடசாலை நடத்த அனுமதிக்கும் படியும் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.