நெல்லையில் கிருஷ்ண ஜெயந்தி விழா; கோயில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2023 01:09
திருநெல்வேலி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நெல்லையில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை ஜங்ஷன் வரதராஜ பெருமாள் கோயில், பாளை ராஜகோபாலசுவாமி கோயில், கொக்கிரகுளம் நவநீதகிருஷ்ண சுவாமி கோயில், டவுன் நரசிங்க பெருமாள் கோயில், நெல்லை அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அருகன்குளம் கோசாலையில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நெல்லை டவுன் அப்பர் தெரு சந்தான கோபால நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலில் கோகுலாஷ்டமி விழாவில் சடகோபன் நம்பியப்பன் குழுவினர், கிருஷ்ணர் அவதாரங்களை எடுத்துரைத்தனர். வேணுகோபால நவநீதகிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. 10ம் தேதி லட்சுமி கோஷ்டியினரின் ராதாகிருஷ்ண கோலாட்ட மண்டலியினரின் கோலாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி ருக்மணி கல்யாண வைபவம் நடக்கிறது. 16ம் தேதி ஆஞ்சநேய உற்சவத்துடன் கோகுலாஷ்டமி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை டிரஸ்டி வெங்கட்ராமன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.