வேம்பார்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் அக்னிசட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2023 01:09
கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இவ்விழா ஆகஸ்ட் 22 ல் தீர்த்தம் அழைத்து வந்து காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் ,அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் கொடியேற்றம், கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், அம்மன் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை முளைப்பாரியுடன் அம்மன் கோயிலுக்கு வருதல், தொடர்ந்து மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று வாணவேடிக்கை மற்றும் மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.