வேம்பத்தூர் வராஹி அம்மன் பீடத்தில் சிறப்பு யாக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2023 03:09
மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள கவிராஜ பண்டிதர் மற்றும் வராஹி அம்மன் பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற யாக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் கவிராஜ பண்டிதர் மற்றும் வாராஹி அம்மன் பீடம் உள்ளது. இங்கு தினந்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிகளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து புனித நீர் அடங்கிய குடங்களை வைத்து யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய குடங்களை கொண்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.இந்த பூஜையில் மானாமதுரை, வேம்பத்தூர், சிவகங்கை, திருப்பாச்சேத்தி, மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கவிராஜ பண்டிதர், வாராஹி அம்மன் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகி வேத உபாசகர் வேதநாராயணன் உட்பட பலர் செய்திருந்தனர்.