சோழிங்கநல்லுர், இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2023 08:09
சென்னை: சோழிங்கநல்லுர், அக்கரை, இஸ்கான், ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நிறைவடைந்தது.
இஸ்கான் (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) 7 செப்டம்பர் 2023 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை சிறப்பாகக் கொண்டாடியது பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். செப்டம்பர்6 ம் தேதி ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் சிறப்பு தரிசனமும் ஆரத்தியும் நடைபெற்றது. செப்டம்பர் 7 காலை 7.30 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் சிறப்பு தரிசனம் துவங்கியது. பக்தர்கள் பகவானின் திருநாமத்தை பாடி மகிழ்ந்தனர். ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு ஆரத்தி நடைபெற்றது, அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. பகவத் கீதை வகுப்பில் பங்கேற்பதற்கான சேர்க்கை நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் விளையாட்டுகள், வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றனர். விழா ஏற்பாட்டை கிளை தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.