மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வெயிலுகந்த விநாயகர்; கேடகம் வாகனத்தில் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2023 12:09
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உட்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படுகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவின் துவக்கமாக செப்.10ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடங்கியது. விழாவின் தொடர்ச்சியாக முதல் நாளில் வெள்ளி மூசிக வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து விழாவில் இரண்டாம் நாள் மாலையில் கேடகம் வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி உலா வந்த விநாயகருக்கு தெருக்களில் பெண்கள் மாக்கோலம் இட்டு வரவேற்றனர். தொடர்ந்து விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.