பதிவு செய்த நாள்
12
செப்
2023
12:09
பெங்களூரு: பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்தியப்பிரதேசம், உஜ்ஜயினியின் மஹா காலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்தார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.,வின் செல்வாக்குமிக்க தலைவர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்,
சில காலம் பொது இடங்களில் தென்படவில்லை. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திலும், அவ்வளவாக பங்கேற்கவில்லை. இந்நிலையில் மத்தியப்பிரதேசம், உஜ்ஜயினியின், பிரசித்தி பெற்ற காலேஸ்வரா கோவிலுக்கு, எடியூரப்பா தன்குடும்பத்துடன் நேற்று காலை சென்றிருந்தார். ஜோதி லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: ‘ஜி – 20’ மாநாட்டை, வெற்றிகரமாக ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடியை உலகமே பாராட்டுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, வருகை தந்த தலைவர்களும் பாராட்டினர். நாட்டு மக்களின் சார்பில், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.