இலங்கை யாழ்ப்பாணத்தில் தருமபுரம் ஆதீனம் மடாதிபதிக்கு பூர்ணகும்ப மரியாதை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2023 04:09
மயிலாடுதுறை: இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசாமி கோயில் தேர் திருவிழாவில் பங்கேற்க இலங்கை சென்றுள்ள தருமபுரம் ஆதீனம் மடாதிபதிக்கு, யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோயில் தேர் திருவிழாவில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறை, தருமபுரம் ஆதின 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஒரு நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் சென்றடைந்தார். அவருக்கு அங்கு திருக்கேதீஸ்வரம் திருப்பணி குழுவினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நல்லூர் கந்தசாமி கோயில் தேரோட்டத்தில் பங்கேற்கும் குரு மகா சன்னிதானம் திருக்கேதீஸ்வரர் ஆலயம், நகுலேஸ்வரர் ஆலயம், மாவிட்டபுரம் ஆலயம் ஆகிய பாடல் பெற்ற சிவாலயங்களை தரிசனம் செய்கிறார். தொடர்ந்து இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். அவருக்கு இலங்கையில் உள்ள தமிழர்கள் பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்