பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார்கோவிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2023 05:09
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார்கோவில் உட்பட அனைத்து சிவன் கோயில்களிலும் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சிவாய நம கோஷத்துடன் வழிபாடு நடத்தினர்.
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் இன்று மாலை 4:00 மணிக்கு பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் வெள்ளி கவசம் சாற்றி சந்தன காப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில், விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தில் சுற்றி வந்தார். அப்போது பக்தர்கள் சிவாய நம, நம சிவாய கோஷத்துடன் வழிபட்டனர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வெள்ளி கவசம் சாற்றிய நிலையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
*எமனேஸ்வரம் எமன் ஈஸ்வரனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற எமனேஸ்வரமுடையவர் கோயிலில் நந்திக்கு இன்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் இங்கு உள்ள வடக்கு நோக்கிய பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*நயினார் கோவில் நாகநாத சுவாமி கோயில் சன்னதி முன்பு உள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டார்.
*பரமக்குடி அருகே மேல பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோயிலில் அருள்பாளிக்கும் பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்த நிலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
*பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் உள்ள ஞான யோகானந்த ஆசிரமத்தில் அருள்பாலிக்கும் ராஜ கணபதி கோயில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.