உப்பூர் வெயிலுகந்த விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2023 05:09
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு சதுர்த்தி விழா செப்.10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. விழாவில் மூன்றாம் நாளில் சிம்ம வாகனத்தில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து ஊர்வலமாக சென்ற விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். விழாவின் எட்டாம் நாளான செப். 17 ல் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தமிழகத்திலே இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவதால் இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கி வருகிறது.