சனாதனம்; அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 01:09
புதுடில்லி: சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசும் போது, சிலவற்றை நாம் ஒழிக்க தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்க கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோன்று தான் சனாதனம்; அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்றார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெகன்நாத் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சனாதன மாநாட்டில் உதயநிதி பேசியது நாடு முழுவதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.