சனாதன தர்மம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமை.. கருத்து சுதந்திரம் என்று யாரையும் காயப்படுத்த கூடாது; உயர் நீதிமன்ற நீதிபதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2023 12:09
சென்னை : ”சனாதன தர்மம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு என நீதிபதி என்.சேஷசாயி விளக்கமளித்துள்ளார்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில், சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி.
மேலும் அவர் கூறியதாவது: சனாதன தர்மம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு என விளக்கமளித்தார். இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா. குடிமகன் நாட்டை நேசிக்கக் கூடாதா? நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் எனவும் குறிப்பிட்டார். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ - மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யாரையும் காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.