சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2023 23:46
சிதம்பரம்: சிதம்பரம் பெரியார் தெருவில் அமைந்துள்ள நர்த்தன விநாயகர் என அழைக்கப்படும் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் உற்சவம் கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு பிள்ளையார் எட்டுவிதமான வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்ளுக்கு அருள் பாலித்து வந்தார். 9ம் நாள் விழாவா தேர் திருவிழா நேற்று நடந்தது. காலை 9 மணியளவில் ஏராளமான பக்தர்கள் ஆனை முகன், கணேசா, விநாயகா" என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அனந்தீஸ்வரன் கோயில் அக்ரகாரம், அனந்தீஸ்வரன் கோயில் தெரு, சின்னக் கடைத்தெரு. பெரியார் தெரு வழியாக சென்று மீண்டும் தேர் நிலையை வந்தடைந்தது. இன்று 10ம் நாள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை,விநாயகர் வீதி உலா நடைபெறும். நாளை பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராமச்சந்திரன் தலைமையில் அந்த பகுதி பக்தர்கள் செய்திருந்தனர். தேர் செல்லும் பாதையில் உள்ள மின் கம்பிகளை அகற்றும் பணியில் சிதம்பரம் மின் துறையினர் ஈடுபட்டனர்.